‘தி ப்ரூப்’ – திரில்லராக வெளியான சாய் தன்ஷிகா பட டிரைலர்..!

0
162

The Proof Trailer: தமிழ் சினிமாவில், ‘மாஞ்சா வேலு’, ‘பேராண்மை’, ‘இருட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் தற்போது, நடன இயக்குநர் ராதிகா இயக்கத்தில் ‘தி ப்ரூப்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ரித்விகா, அசோக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் சாய் தன்ஷிகா ஆக்ரோஷமாக இருப்பதுபோன்று இருக்கிறது.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) ‘தி ப்ரூப்’ படத்தின் டிரைலரை இன்று வெளியானது. இந்த டிரைலரை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. ‘தி ப்ரூப்’ படம் கட்டாயம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைலர் ரசிகர்களிடம் கவனம் பெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here